Home » » குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு.....!

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு.....!

குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு.....!



பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 


சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.


செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. 


கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) வைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.


செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள நுண்ணுயிரிக்கள் செத்து மடிகின்றன. துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், நுண்ணுயிரிக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.


ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.


இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், கலங்களால் உறிஞ்சப்படுகிறது.


உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.

Share this article :

நாம் தமிழர் கட்சி - நிகழ்வுகள்

 
Support : Creating Website | VTMUK | SURESH
Copyright © 2013. லண்டன் தமிழர் ஒன்றியம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by SURESH
Proudly powered by Suresh