Home » » தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !

தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !




தமிழில் கணிதம் என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆங்கில கல்வியும், ஆரியமும் நம்மை பார்த்து இன்று ஏளனமாக சிரிக்கிறது . 

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றதோடு நுணுக்கமாக நேர்கோட்டில் வீதிகளையும், வீடுகளையும், கோவில்களையும், சிற்பங்களையும் கட்டி அமைத்தனர்.

அவை எல்லாம் நுண் கணிதம் இல்லாமல் சாத்தியமாகாது. யானைப் படையை ஏற்றிக் கொண்டு கடல் வழியே கடாரம் வரை சென்றது சோழர் படை . அக்கப்பல்கள் எண் கணிதம் இல்லாமல் வடிமைக்கப்படுமா ? 

எண்ணியல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு இந்தப் படமே சான்று . 

பண்டைய தமிழர்கள் பத்தின் பெருக்கம் அனைத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டை உருவாக்கினர்.

நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலக்கம், கோடி என விரியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெயர் வைத்து வழங்கிய தமிழர்கள் எந்த அளவிற்கு தமிழ் கணித முறையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழை அறிந்தவர் கணிதத்தையும் அறிந்தவரே ஆவார். மீட்டெடுப்போம் தமிழர் கணித முறைகளை. நம் குழந்தைகளுக்கு தமிழ்க் கணித முறையை சொல்லிக் கொடுப்போம். 
Share this article :

நாம் தமிழர் கட்சி - நிகழ்வுகள்

 
Support : Creating Website | VTMUK | SURESH
Copyright © 2013. லண்டன் தமிழர் ஒன்றியம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by SURESH
Proudly powered by Suresh