Home » » தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!

மிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!.

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.! 

மலையாளிகள் கொண்டாடும் அரிசி.!
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.



வாதம்பித்தம்கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகலநோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்இந்த மூன்று நாடிகளின்தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள்கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறதுஜப்பான்கொரியாபிலிப்பைன்சு,இலங்கைஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறதுகொரியாவில் உள்ளசில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரைதிருநெல்வேலிதஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல்அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்றுஆனைகட்டிப்போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல்விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும்மானாவாரியாக விளைந்ததுஆகவேஇதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றனஅதனால்தானோ என்னவோசமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களேபெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகாபீகார்ஒடிசாமத்தியப் பிரதேசம்வங்காளம் முதலிய மாநிலங்களில்இது பயிரிடப்பட்டாலும்கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்இந்த அரிசிக்கு அவர்கள்கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’ஆனால்அவர்கள் இதை மிகவும் விரும்பிச்சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும்.என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம்வேண்டாம்... வெள்ளைச் சோறுபோடு...'' என்று சொல்வதையும்பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசிசாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும்ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது.ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பிசாப்பிட்டதோடுலண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பிவந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும்இப்போது நான் பட்டியலிடப்போகும்சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள்உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளேஇருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள்(Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும்வெறும் சக்கை மட்டும்உள்பகுதியிலும் இருக்கின்றனநாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக்கொடுத்துவிட்டுசக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானதுஇதன் சத்துக்கள் அனைத்தும்மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால்இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெறமுடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்தஅரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்),மெக்னீசி(ஷி)யம்செலினியம்பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre)என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்குஅற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின்பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும்இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விடசிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புதவேதிப்பொருள் உள்ளதுஇதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும்'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காகஉலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினைஉற்பத்தி செய்கிறதுஅதனால் சீனாவில்செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவேவளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர்இதைத் தவிரசர்க்கரை நோய்,ரத்தக்கொதிப்புஈரல் வியாதிகள்பித்தப்பை கற்கள்சுவாசகாசம் மற்றும் பலவிதஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

Share this article :

நாம் தமிழர் கட்சி - நிகழ்வுகள்

 
Support : Creating Website | VTMUK | SURESH
Copyright © 2013. லண்டன் தமிழர் ஒன்றியம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by SURESH
Proudly powered by Suresh