முதன்மை செய்திகள்

தாயின் உள்ளம் அழுகிறது




காஞ்சிபுரத்தில் 7-1-16 அன்று நடைபெற்ற நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் பிறந்தநாள் விழாவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பேசிய உணர்ச்சிமிக்க உருக்கமான பேச்சு நெஞ்சை நெகிழவைக்கும் கவிதை வடிவம் பெற்றுள்ளது.

பணம், பதவி உள்ளவர்கள் நிம்மதிக்குப்
பதிவுசெய்து வைத்ததுபோல் பாதுகாப்பு!
குணம், குடும்ப நிலையெல்லாம் குப்பைக் கூடைக்
குடியிருப்பு! புலிதாழ்ந்தால் எலிவெல்லாதா?
மனம் அறியத் தவறுசெய்யா மகனைப் பெற்று
வன்சிறைக்குப் பறிகொடுத்தேன்! வாழ்வி ழந்தேன்
தினம் தினம் நான் பேரறிவாளமுகத்தைச்
சிற்பியைப்போல் மனம் வடிப்பேன் கண்ணீரோடு!

சிறைச்சாலை அதிகாரி சான்று தந்தார்
""சிறந்தவனாய் நன்னடத்தைக் காட்டுகின்றான்
மறைவாகக் குற்றங்கள் ஏதும் செய்யான்
மனத்தளவில் பாராட்டும் படியே வாழ்ந்தான்
நிறைவாக இருக்கின்ற செயல்கள் கண்டோம்
நீர்மீது தாமரைபோல் நிலைத்தான்!'' என்றார்
அறைகூவி அவன் உயர்ந்தோன் என்பேன் ஆனால்
அவன் என்று விடுதலையை அடைவா னோகேள்!

"சஞ்சய்தத்' விடுதலையைக் கேட்டேன்! என்றன்
சந்தனத்தின் விடுதலைதான் என்றோ? நானோ
பஞ்சைப்போல் நரைவந்து தளர்ந்தேன்! செத்தால்
பால்வார்க்க வருவானோ பிள்ளை? இன்னும்
நஞ்சைப்போல் அவனை எண்ணிச் சிறையின் உள்ளே
நாள் கடத்திக் கொண்டிருப்பார்! கூண்டில் உள்ள
கொஞ்சுகிளி பறந்துவந்து வீட்டில் என்னைக்
கூப்பிடுமா? அவன்கையால் உணவுண் பேனா?

மரணதண்ட னைக்கெதிராய் மக்கள் கூடி
மாநாடு! மன்றங்கள்! நடத்து கின்றார்!
கிருஷ்ணய்யர் இன்றிருந்தால் மகனுக் காகக்
கேட்பாரே விடுதலையை! அவரும் இல்லை!
பெருகாதா என்கண்ணீர்! பேசி என்ன
பெறப்போகின் றேன்பாவி! பிள்ளை வாழ்வு
கருகாதா? எனத்துடிக்கும் தாயின் உள்ளம்
காணாதார் கண்என்ன கண்ணோ சொல்வீர்!

வெள்ளிநிலா பார்த்ததுண்டு! நான்பால் சோறு
விளையாட்டுக் காட்டிஊட்டியதை! பின்னால்
பள்ளிக்குப் போனமகன் படித்து வந்தான்
பார்த்துப்பார்த்தே நான் வளர்த்தேன்! அன்று
துள்ளிக்கு தித்துவந்தான் சிறைக்கம்பிக்குள்
தூங்கவா நான் வளர்த்தேன்? சாகும் போது
கொள்ளியிட வருவானோ? குழந்தையாகக்
கொடுத்தமுத்தம் தருவானோ? ஏங்குகின்றேன்!

பூமுடித்துப் பார்த்தேனா? தாலிகட்டும்
பொன்னாளைப் பார்த்தேனா? மருமகள்மேல்
போய்இடித்துப் பாய்ந்தேனா? மாமியார்போல்
புனைந்துகொண்டு நடித்தேனா? பாட்டி யாராய்
ஏன் அடிநான் என்வீட்டில் எடுக்க வில்லை?
எனைச்சுட்டால் எரிநெருப்பும் கண்ணீர் சிந்தும்
வாயடைத்துப் போய்விட்டால் குமுறும் உள்ளம்
வார்த்தைகளை வெளியனுப்பி வருந்திடாது

சுடுசோறு போட்டேனே! சிறையில் அங்கே
சுடுசோறு கிடைத்திடுமா? தலைவலித்தால்
மடிமீது படுக்கவைத்துப் "பத்து' போட்டேன்.
மகனே உனக்கங்கே தலைவலியா?
குடல்துடிக்கு தையா! நான் வரலா மா? கேள்!
குளிப்பதற்கு வெந்நீர்த ருவேனே! அங்கே
கிடைக்கிறதா இதமான வெந்நீர்? நெஞ்சைக்
கிழிப்பதுபோல் இருக்கிறதே நினைத்துப் பார்த்தால்!

பிள்ளைகுட்டி பெற்றவர்கள் இருக்கின் றாரா?
பேய்கள்தான் வசிக்கிறதா? மகன்மேல் அன்பை
உள்ளபடி உணர்ந்தோரும் வாழ்கின்றாரா?
ஓயாத அழுகையினை உரிமை ஆக்கித்
தள்ளியதோர் பள்ளத்தில் இந்தத் தாயைத்
தவிக்கவிட்டுப் போனமகன் திரும்பு வானா?
நள்ளிரவும் பகலாக மாறி என்னை
நடுங்கவைக்கச் செய்கிறதே! என்ன செய்வேன்?

என் கண்ணீர் இந்நாட்டில் ஒருவருக்கும்
ஏற்படவே கூடாது! தாங்க மாட்டீர்!
இம்மண்ணில் மலடியென இருந்திருந்தால்
இத்துயரம் எனக்கில்லை! சிங்கக்குட்டி
என்வயிற்றில் பிறந்ததுபோல் பிறந்தானே! ஓர்
இரும்புக்கம் பிக்குள்ளே இருக்கத் தானா?
சொன்னாலும் விளங்காது! விளங்கி னாலும்
துயருக்கு விடிவேது? விடைதான் ஏது?

இலங்கைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்..!

இலங்கைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள்
பேராசிரியர் பாலசுந்தரம்
  
   ஈழத்து மண்ணில் தமிழ் கற்றவர்களும், தமிழ்ப்பணியாற்றியவர்களும் உலக அளவில் தங்கள் பணிகளை விரிவாகச் செய்துள்ளனர். இத்தகு அறிஞர் பெருமக்கள் இன்றும் தமிழ்ப்பணியில் தொய்வில்லாமல் உழைத்துவருகின்றனர். அவர்களுள் இப்பொழுது கனடாவில் வாழும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். தமிழ், தமிழர்களுக்கு ஆக்கம் நல்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பதில் ஆர்வம்காட்டி வரும் இவர்தம் வாழ்க்கைக் குறிப்பையும், பணிகளையும் என் பக்கத்தில் பதிந்துவைக்கின்றேன்.
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் இலங்கையில்மட்டக்களப்பு மாவட்டம் காரைதீவு என்னும் ஊரில் 05.09.1946 இல்பிறந்தவர்இவர்தம் பெற்றோர்இளையதம்பி,  செல்லம்மா ஆவர்.காரையூரான்கலைப்பிரியன்,இலக்கியப்பிரியன் என்னும்பெயர்களில் படைப்புகளைவழங்கியவர்.
இளமைக்கல்வியைக் காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும்உயர்பாடசாலைக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் பயின்றவர். பின்னர் பி.ஏ. சிறப்புக் கலைமானி படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் (1969), முனைவர் பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும்(1977), முனைவர் பட்டப் பின்படிப்பினை இங்கிலாந்து,செவ்பீல்ட் பல்கலைக்கழகத்திலும்(1992-94), உயர்நிலை கவுன்சிலிங் டிப்ளோமா படிப்பைக்கனடா - ரொறன்ரோ,     ஜோர்ஜ் பிறவுண் கல்லூரியிலும் பயின்று பெற்றவர்(2002)
பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் (1969-1970) கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் (1971-1983) தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.அதன்பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் (1984-1990)பணியாற்றி1991 முதல் 1994வரை பேராசிரியராகத் தமிழ்ப் பணியாற்றிய பெருமைக்குரியவர்புலம்பெயர் வாழ்க்கையில் கனடாவில் குடியமர்வுச் சேவை அலுவலர்(1997-1998) என்னும் பணியில் இருந்தவர். 1999 முதல் 2004வரை தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளிநிலை பட்டப்படிப்பு - ரொறன்ரோவில்தமிழ்த்துறைப் பேராசிரியராகப்பணிபுரிந்தவர் 2006 முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகத்தின்  தமிழ்த்துறைத் தலைவர்     பணியில் இருந்தவர். 1996முதல் ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை அனைத்துலக மொழிக் கல்வி - தமிழ் ஆசிரியர் என்று பணிபுரிந்தவர்.இவர் இலக்கணம்இலக்கியம்நாடகம்,நாட்டுப்புற இலக்கியம் ஊர்ப்பெயராய்வு உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உடையவர்.
புலமைப் பரிசுகள்:
                                                                                                                       
(1) பிரித்தானியா பொதுநலவாய நாடுகளுக்கான உயர்நிலைப் புலமைப் பரிசுசெவ்பீல்ட்         பல்கலைக்கழகம்,இங்கிலாந்து. 1992-1994
(2) அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கான விருந்தினர் கல்விப் புலமைப் பரிசு,  ஐக்கிய அமெரிக்க கல்விகலாசாரப் பிரிவுஐக்கிய அமெரிக்கா. 1990
(3) அமெரிக்க கல்வித் திணைக்களப் புலமைப்பரிசுஅமெரிக்க கல்வி நிறுவனம் கைதரபாத். இந்தியா, 1988     
(4) ருசிய நாட்டு அரசாங்கப் புலமைப் பரிசுபுஷ்கின் ரூசியமொழி,பண்பாட்டு கல்வி நிறுவனம்,மாஸ்கோ,1984                                
(5) படி பேங் புலமைப் பரிசு - பேராதனைப் பல்கலைக்கழகம், 1966-1969
(6) நாட்டாரிசை இயல்பும் பயன்பாடும் - என்ற நூல் சாகித்திய மண்டலப்பரிசு கலாசார அமைச்சு,இலங்கை.1991
வெளியிட்ட நூல்கள்:
1. பண்டைத் தமிழர் பண்பாடு: காலமும் கருத்தும் - மீளாய்வு. (அச்சில்)
2. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு,    விவேகா அச்சகம். ரொறன்ரோ, 2009
3. Exploration in Sri Lankan Tamil Folklore, Manimekalai Pirasuram,  Madras, 2008
4. விபுலாநந்தம் - தமிழின மேம்பாடு நோக்கிய சிந்தனைகள்விவேகா அச்சகம்,          கனடா, 2004
5. மட்டக்களப்பு மாவட்டத் திருமண நடைமுறைகள்விவேகா அச்சகம்,ரொறன்ரோ.2003
6. நாட்டாரிசை - இயல்பும் பயன்பாடும். யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழக வெளியீடுமேக்கூரி அச்சகம், 1991
7. ஒப்பனைக் கலை. கத்தோலிக்க அச்சகம் -யாழ்ப்பாணம். 1990
8. தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்,கத்தோலிக்க அச்சகம்யாழ்ப்பாணம், 1989.           இரண்டாம் பதிப்பு மணிமேகலைப் பிரசுரம் 2003
9.  இடப்பெயராய்வு வடமராட்சி தென்மராட்சிமேக்கூரி அச்சகம்,யாழ்ப்பாணம், 1989
10. இடப் பெயராய்வு காங்கேயன் கல்வி வட்டாரம்யாழ்ப்பாணம், 1988
11. காத்தவராயன் நாடகம் - பதிப்பு,யாழ்ப்பாண மாவட்ட கலாசார சபை வெளியீடு,          கத்தோலிக்க அச்சகம்,யாழ்ப்பாணம், 1986
12. நாட்டார் இலக்கியம் ஆய்வும் மதிப்பீடும் - மட்டக்களப்பு மாவட்டம்,சென்னை,  தமிழ்பதிப்பகம், 1979,இரண்டாம் பதிப்பு 2003.
(மேலட்டை உதவி: நூலகம் இணையதளம்)
சாதனைகள்:
1. கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அடைந்த சாதனைகளால் யாழ்ப்பாணப்    பல்கலைக்கழகம் திறமையடிப்படையில் இணைப்பேராசிரியர் பதவி வழங்கியமை.
2. பொதுநலவாய நாடுகளின் சிறப்புப்புலமைப் பரிசில் பெற்றமை.
3. புலமைப்பரிசில்கள் பெற்று இந்தியா,ரூசியாஐக்கிய அமெரிக்கா,
இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேலாய்வு மேற்கொண்டமை.
4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக்கொண்டு காத்வராயன்,சத்தியவான் சாவித்திரி ஆகிய இசைநாடகங்களைத் தயாரித்து யாழ்ப்பாணம்திரிகோணமலை,மன்னார்கொழும்பு ஆகிய இடங்களில்49 தடவைகள் மேடை ஏற்றி,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகத்துறை வரலாற்றில் சாதனை படைத்தமை.
5. பல ஆண்டுகள் ஆய்வு செய்து யாழ்ப்பாண மாவட்டத்து இடப்பெயர்கள் பற்றிய் நூலை ஈழத்தமிழர் வரலாற்றுக் களஞ்சியமாக வழங்கியமை.
6. கனடாவில் பல்வேறு கலை மன்றங்களின் சார்பாகப் பெரும் கலைவிழாக்கள்- ரொறன்ரோவில் திருவையாறு முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தியமை
கனடாவில் கிடைத்த சிறப்புவிருதுகள்:
(1) 2010 - கனடிய குடிவரவு அமைச்சின் தொண்டர் சேவைக்கான விருது.
(2). 2009 - “Outstanding Achievement Award”- Awarded at the Settlement &                      Education Partnership Toronto – Celebration of 10 years of  success,                      by the  Citizenship and Immigration Canada, Toronto District School Board     and Thorncliffe Neighborhood Office
(3) 2008 - “செந்தமிழ்க் காவலர்” -விருது துர்க்கேஸ்வரம்.ரொறன்ரோ,ஸ்ரீதுர்க்கா தேவி அம்பாள் தேவஸ்தானம்கனடா
(4) 2007 -“வித்யா பூஷன்”, விருது - கம்பன் விழாக்குழுமேருபுரம் பத்திரகாளி அம்மன் தேவஸ்;தானம்ரொறன்ரோ.
(5) 2007 - “சிறந்த கல்விச் சேவைக்கான விருது” – The Arajen Beauty Centre,    Annual Tamil Cultural Beauty Contest Event, Toronto
(6). 2006 -  “Tamils’ Information Award” – In Recognition of his outstanding and                            exemplary contribution to Tamil Studies and Research for over forty years, by Tamils Information,  Toronto.
(7) 2006 -  “முத்தமிழ் வித்தகர்” தமிழர் செந்தாமரை வெளியீட்டகம்,ரொறன்ரொ.
(8) 2006 -  “சிவத் தமிழ் வித்தகர்” –ரொறன்ரொ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்,
(9) 2006 -  “வண்டமிழ் வள்ளல்” –ரொறன்ரொ தமிழர் பண்பாட்டுக் கழகம்.
(10) 2000 - “திருத் தொண்டர்”- விருது வேதாந்த ஞான மன்றம் - கனடா.
 கழகங்களில் வகித்த பதவிகள்:
1. தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் - கனடாதலைவர் 2011---
2. காரைதீவு மக்கள் ஒன்றியம் - கனடா,தலைவர் 2009….
3. கதிர்ஒளி வாரப் பத்திரிகை - ஆசிரியர் குழு உறுப்பினர் 2009…..
4. விபுலாநந்தர் கலை மன்றம் - கனடா- தலைவர் 2003-2006, காப்பாளர் 
5. சிவானந்தா வித்தியாலயம் பழைய மாணவர் மன்றம்-கனடாகாப்பாளர்2010..
6. மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம். இலங்கை. காப்பாளர். 2010 …
7. இலங்கை பட்டதாரிகள் கழகம் - கனடா,துணைத் தலைவர் 2009 -2011
8. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், (உலகத் தாயமைப்பு) காப்பாளர்;,
   கல்வித்துறைப் பொறுப்பாளர் 2002- 2011.
9. உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் -கனடாக்கிளை- காப்பாளர் 2000-2011
10. கனடா கந்தசுவாமி கோயில் அறங்காவல் சபை உறுப்பினர் 2000- 2002
11. ஒன்ராறியோ நுண்கலைக் கல்லூரி - ஆலோசகர்குழு உறுப்பினர் 2003 
12. Ontario Multi Cultural Association- Vice President 2001-2003 
13. தமிழ்ப் பெற்றோர் சங்கம் - ரொறன்ரோசெயற்குழு உறுப்பினர்2002..
14. அக்கினிக்குஞ்சு - இணையத்தளம் - கனடா ஆலோசகர்
15. நாடடுப்புற வழக்கியல் கழகம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;.தலைவர் 1990-1994
16. கொழும்புத் தமிழ்ச் சங்கம் - துணைத் தலைவர், 1982
17. இலங்கை கலாசார பேரவை - நாடகக் குழு உறுப்பினர், 1978 - 1983
18 மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கம்,கொழும்பு - செயலாளர்,1977- 1983
19. யாழ்ப்பாண மாவட்டக் கலாசார சபை உறுப்பினர் 1985-1988
 கனடாவில் ஊடகத்துறைப் பணிகள்:
1.1997ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் தமிழர் பண்பாடு - கனேடிய குடிவரவுச் சட்டம் – முதலான செய்திகள் பற்றித் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வார இதழ்களான தமிழர் செந்தாமரை- கதிர் ஒளி வாரப் பத்திரிகைகளில் கட்டுரைகள்  எழுதிவருதல்.
2. தொலைக்காட்சிவானொலி ஆகியவற்றில் கலந்துரையாடல் –கருத்துரை,  நேர்காணல் என்ற நிகழ்வுகளில் பங்கேற்றல்.
 பங்கேற்ற கலைஇலக்கிய,பண்பாட்டு மாநாடுகள்:
1.1996. 2006. 2007. 2009. 2010 உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க மகாநாடுகள்: (கனடா. ஜேர்மனி. மலேசியா. தென்னாபிரிக்கா.)
2.1998 இலிருந்து வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(பெட்னா) நடத்திவரும் இலக்கிய  நிகழ்வுகளில் கலந்து கொண்டமை.
2.1993 -  Folklore Conference, Sheffield, U.K.
3.1990 – Folklore Conference, Oakland, San Francisco, USA
4. 1984 – Language and Cultural Conference , Pushkin Institute, Moscow, USSR
5. 1980 - முதலாவது உலக இந்து கலாசார மாநாடுகொழும்பு
6. 1974 - நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுயாழ்ப்பாணம்.
  கனடாவில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு தமிழ் இலக்கியச்சிறப்பை எடுத்துரைத்துப் பரப்பிவரும் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணி தொடர நெஞ்சார்ந்து வாழ்த்துகள்!

நாம் தமிழர் கட்சியின் 314 பக்க தேர்தல் அறிக்கை

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் 314 பக்கங்கள் அடங்கிய வண்ண தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். அதில் திருவள்ளுவர், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், பாரதிதாசன், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன. வரைவு அறிக்கையில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக மீன், புலி, வில்அம்பு (சேர, சோழ பாண்டியர் கொடி) இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 இந்த அறிக்கையில் 49 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வரைவு அறிக்கையில் முக்கிய அம்சங்கள் வருமாறு:– 

 * சென்னை தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்துமே ஒரே இடத்தில்தான் குவிந்திருக்கிறது. இதனால் அனைத்து மக்கள் சென்னையை நோக்கியே வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக தலைநகரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 ஆக பிரிக்கப்படும். இதில் திரைகலை, துறைமுகம், கணினி தொழில்நுட்பத்தின் தலைநகராக சென்னை விளங்கும். செயலாண்மை வசதிக்கான தலைநகராக திருச்சியும், தொழில் வர்த்தக தலைநகராக கோவையும், மொழி கலை பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும், தமிழர் மெய் இயலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் விளங்கும். 

 நீர்வளத்தை பெருக்க நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகளை சுற்றி மரங்கள் நடப்படும். புதிதாக ஏரிகள் வெட்டப்பட்டு கரிகால்சோழன், ராஜராஜ சோழன், குந்தவை நாச்சியார், நம்மாழ்வார் ஆகியோர் பெயர்கள் சூட்டப்படும். குளிர்பான தொழிற்சாலைகளுக்காக 803 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. எனவே அந்த தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். தூய்மையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். விவசாயம் தமிழக அரசின் பணியாக மாற்றப்படும். ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை மேலாண்மை மேற்கொள்ளப்படும். பனை பொருள் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு பெருக்கப்படும். தொழில் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்படும். இதற்கு முந்தைய அரசுகள் தமிழர்களை இலவசத்துக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டனர். எனவே நாம் தமிழர் ஆட்சியில் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும். வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். மது, புகையிலை ஒழிக்கப்படும். போக்குவரத்து கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும். மருத்துவத்துக்கும், கல்விக்கும் மாற்று மின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். உழவர்கள், மீனவர்கள், வணிகர்கள் நலன்காக்கும் வகையில் திட்டங்கள் மேம்படுத்தப்படும். அமைப்பு சாரா தொழிலாளர் நலம் மேம்படுத்தப்பட்டு கட்டுமான தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். ஈழ தமிழர்களின் நலன்காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் மீதான ‘கியூ’ பிரிவு போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணை நீக்கப்படும். அவர்களுக்காக தனி நலவாரியம் உருவாக்கப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ¼ நூற்றாண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மாநில அரசுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்படுவார்கள். புதிய துறைமுக கொள்கை உருவாக்கப்படும். தமிழகத்தில் சென்னை, எண்ணூர், ராயபுரம், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், திருக்குவளை, தூத்துக்குடி ஆகிய 8 இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் கடல்வாழ் உயிரினங்கள் இயற்கையாக வாழ வழிவகை செய்யப்படும்.

நாம் அனைவரும் மிகவும் ஆவலோடு காத்திருந்த ..

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு ..
www.makkalarasu.com

இன்று 23/03/2016 வெளியிட்டுள்ளனர் .
Pdf File ஆகவும் பதிவிறக்கம் செய்யலாம் ..


முழு வரைவுக்கான website link இணையதள தொடர்பு உள்ளது .

செந்தமிழில் மாதங்கள் .............!




தமிழ்ச்சித்தர்களால் வகுக்கப்பட்டதமிழ் மாதங்கள் செந்தமிழில். நாட்கள் கோள்களின் பெயரிலும், மாதங்கள் நட்சத்திரங்களின் பெயர்களிலுமே உலக நாட்காட்டிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாற்காட்டியும் அஃதே சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சித்தர்களால் வகுக்கப்பட்டதமிழ் மாதங்கள் செந்தமிழில். நாட்கள் கோள்களின் பெயரிலும், மாதங்கள் நட்சத்திரங்களின் பெயர்களிலுமே உலக நாட்காட்டிகள் அனைத்தும் வகுக்கப்பட்டுள்ளன.





தமிழ் நாற்காட்டியும் அஃதே சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்.....?


கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.


1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை நிலைப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நடப்ப வழக்கு (fashion) உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாத்(ஸ்)திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப் படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பதுபகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்


அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பத்(ஸ்)தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது. உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!



கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் மரபணு குழந்தைக்குள் இருந்தாலும் அது சமீபத்திய மேம்படுத்தவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்... 

இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?

நாம் தமிழர் கட்சி - நிகழ்வுகள்

 
Support : Creating Website | VTMUK | SURESH
Copyright © 2013. லண்டன் தமிழர் ஒன்றியம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by SURESH
Proudly powered by Suresh